65 வயது தந்தையை மகன் தூக்கிச் சென்ற விவகாரம்: களமிறங்கியது மனித உரிமை கமிஷன்
கேரளாவில் உள்ள கொல்லம் மாவட்டத்தில் புனலூர் என்ற பகுதியை சேர்ந்த 65 வயது தந்தை உடல்நலக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் அவரை வீட்டுக்கு அழைத்துச் செல்ல ஆட்டோவை
களமிறங்கியது மனித உரிமை கமிஷன்
மருத்துவமனை வரை செல்ல போலீசார் அனுமதி மறுத்தனர்
ஊரடங்கு உத்தரவு காரணமாக போலீசார் ஆட்டோவை மறுத்ததால் வேறு வழியின்றி அந்த இளைஞர் தனது தந்தையை ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு ஆட்டோ இருக்கும் இடம் வரை தந்தையிஅ தோளில் சுமந்து சென்றார். அவரது பின்னால் அவரது தாயார் ஓடி வந்தார் என்பதும் இது குறித்த வீடியோக்கள் நேற்று நாடு முழுவதும் வைரல் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் இந்த செய்தியை கேள்விப்பட்ட மனித உரிமை கமிஷன் தற்போது நடவடிக்கை எடுக்க களமிறங்கியுள்ளது. தானாகவே முன்வந்து மனித உரிமை கமிஷன் வழக்கு பதிவு செய்துள்ளதாகவும் கேரள போலீஸ் மீது கடும் நடவடிக்கை எடுக்க மனித உரிமை கமிஷன் திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த செய்தியால் கேரளாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது