வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 27 மார்ச் 2020 (11:02 IST)

வீட்டுக்கே செல்லும் அத்தியாவசியப் பொருட்கள் ! ஸொமாட்டோவுடன் கூட்டணி அமைத்த கேரள அரசு !

கேரள அரசு மக்களின் அத்தியாவசியப் பொருட்கள் வீட்டுக்கே செல்லும் வகையில் ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான ஸொமட்டோவுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

கேரளாவில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 110 ஐ தாண்டியுள்ளது.இந்நிலையில் அம்மாநில முதல்வர் நிவாரணப் பணிகளுக்காக 20,000 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளார். மேலும் மக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளதால் அவர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்துள்ளார்.

இந்நிலையில் ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான ஸொமாட்டோவுடன் ஒப்பந்தம் செய்துகொண்டு ரேஷன் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை மக்களின் வீடுகளுக்கே கொண்டு செல்லும் முயற்சியை மேற்கொண்டு வருகிறது.

முதல்கட்டமாக எர்ணாகுளம் பகுதியில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. ஆன்லைன் மூலம் மக்கள் பொருளை முன்பதிவு செய்தால், அவை வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்த வாரங்களில் இத்திட்டம் கோழிக்கோடு மற்றும் திருவனந்தபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.