செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 21 மார்ச் 2020 (19:22 IST)

கேரளாவில் மேலும் 12 பேர்களுக்கு கொரோனா? மொத்தம் 52ஆக உயர்வு

தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது அம்மாநில மக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. நேற்று முன்தினம் வரை 28 பேர்களுக்கு மட்டுமே கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று ஒரே நாளில் மேலும் 12 பேர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது
 
இதனை அடுத்து கேரள அரசு பொது மக்களை வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று கண்டிப்புடன் கேட்டுக்கொண்டது. இருப்பினும் கேரளா மக்கள் வழக்கம்போல் வீட்டை விட்டு வெளியே வந்து கொண்டிருப்பதால் கொரோனா தாக்கம் இன்னும் அதிகமாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது 
 
இந்த நிலையில் இன்றும் மேலும் 12 பேர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதை முதல்வர் பினராயி விஜயன் அவர்கள் உறுதி செய்துள்ளார். இதனை அடுத்து கேரள மாநில அரசு அதிரடி நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளது. இதுகுறித்து கேரள முதல்வர் பினராய் விஜயன் அவர்கள் பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்
 
இதன்படி கேரள அரசு உத்தரவை மீறி அதிகமான மக்கள் கூடும் நிகழ்வுகள் நடப்பதாகவும் இது மேலும் தொடர்ந்தால் மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவை அமல்படுத்த அரசு தயங்காது என்று கூறியுள்ளார். கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு இல்லாமல் படித்தவர்களே வீட்டை விட்டு வெளியே வந்து கொண்டிருப்பது கேரளா மட்டுமின்றி அனைத்து மாநிலங்களிலும் நிகழ்ந்துவரும் நிகழ்வாக இருக்கிறது என்று சமூக ஆர்வலர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்