வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 26 மார்ச் 2020 (21:05 IST)

கேரளாவில் ஒரே நாளில் 19 பேருக்கு கொரோனா வைரஸ்: அதிர்ச்சித் தகவல்

இந்தியாவில் உள்ள கிட்டத்தட்ட அனைத்து மாநிலங்களிலும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில் இந்த வைரஸை தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இருப்பினும் கொரோனா வைரஸ் அனைத்து மாநிலங்களிலும் மிக வேகமாக பரவி வருவதால் கொரோனா வைரஸால் தாக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அனைத்து மாநிலங்களிலும் அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நமது அண்டை மாநிலமான கேரளாவில் இன்று ஒரே நாளில் 19 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளவர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்கள் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி கேரளாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 126 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்தியாவில் மற்ற மாநிலங்களை விட கேரளாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது அம்மாநில அரசுக்கும் மாநில மக்களுக்கும் பெரும் அதிர்ச்சியாக இருக்கிறது. ஊரடங்கு உத்தரவு உள்பட ஒரு சில நடவடிக்கைகளை பொதுமக்கள் தீவிரமாக கடைபிடித்தால் மட்டுமே இந்த ஆபத்தில் இருந்து தப்பிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது