1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 20 மார்ச் 2020 (21:16 IST)

கேரளாவில் இன்று ஒரே நாளில் 12 பேர்களுக்கு கொரோனா

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக கேரளாவில் ஏற்கனவே கொரோனா வைரஸ் பாதிப்பால் 28 பேர் இருக்கும் நிலையில் இன்று ஒரே நாளில் கேரளாவில் 12 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால் கேரளாவில் மொத்தம் 40 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்கள் தெரிவித்துள்ளார் 
 
கேரளாவில் எர்ணாகுளத்தில் 5 பேருக்கும் காசர்கோடு மாவட்டத்தில் 6 பேருக்கும் பாலக்காட்டில் ஒருவருக்கும் என இன்று ஒரே நாளில் புதிதாக 12 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இதனை அடுத்து பிரதமர் மோடி மக்களிடம் கேட்டுக்கொண்டபடி வரும் 22ஆம் தேதி மக்கள் தங்கள் வீடுகளில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்திய முதலமைச்சர் பினராயி விஜயன், மக்கள் அத்தியாவசிய தேவை இருந்தால் மட்டுமே வெளியில் நடமாட வேண்டும் என்றும் இல்லாவிட்டால் வெளியில் நடமாடுவதை சுத்தமாக தவிர்க்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்