செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 18 நவம்பர் 2022 (17:03 IST)

நிரூபித்தால் பதவி விலக தயார்: சவால் விட்ட ஆளுனர்

Kerala
என் மீது உள்ள குற்றச்சாட்டை நிரூபித்தால் நான் பதவி விலக தயார் என கேரள ஆளுனர்தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
ஆர்எஸ்எஸ் சித்தாந்தங்களை கேரள ஆளுநர் பரப்பி வருவதாகவும் ஆர்எஸ்எஸ் சார்பானவர்கள் பதவியில் நியமனம் செய்து வருவதாகவும் கேரள ஆளுநர் மீது குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது
 
 குறிப்பாக பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் நியமன விவகாரத்தில் ஆளுநர் ஒருதலைபட்சமாக நடந்து கொள்கிறார் என்றும் ஆர்எஸ்எஸ் சார்பானவர்கள் மட்டுமே பதவியில் அமர்த்துவதாக குற்றம் சாட்டப்பட்டது
 
இது குறித்து விளக்கமளித்த கேரள ஆளுனர் ஆரிப் கான், ‘என்னுடைய பதவியை நான் தவறாக பயன்படுத்துவதாக நிரூபித்தால் நான் வகிக்கும் கவர்னர் பதவியிலிருந்து விலகுகிறேன். கடந்த மூன்று ஆண்டுகளில் ஒரு இடத்தில் கூட நான் ஆர்எஸ்எஸ் சித்தாந்தங்களை செயல்படுத்தவில்லை. என் பெயரை, அதிகாரத்தை பயன்படுத்தி தவறாக நடந்ததாக நிரூபித்தால் நான் பதவியை ராஜினாமா செய்கிறேன் என்று கூறியுள்ளார்
 
Edited by Siva