வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 18 நவம்பர் 2022 (08:50 IST)

எஸ் ஜே சூர்யா நடிக்கும் புதிய வெப் சீரிஸ் ‘வதந்தி’… பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

பிரபால நடிகர் எஸ் ஜே சூர்யா நடிப்பில் வதந்தி என்ற வெப் சீரிஸ் அமேசான் ப்ரைம் சார்பாக உருவாக்கப்பட்டு வருகிறது.

சமீபத்தில் எஸ் ஜே சூர்யா மாநாடு, டான் உள்ளிட்ட படங்களில்  வில்லனாக நடித்து பாராட்டுகளைக் குவித்தார். அதையடுத்து அவர் கொலைகாரன் பட இயக்குனர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் ஒரு வெப் தொடரில் நடித்து வருகிறார். அதன் படப்பிடிப்பு நடந்து முடிந்து தற்போது முதல் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த வெப் சீரிஸை அமேசான் ப்ரைமுக்காக புஷ்கர் காயத்ரி தம்பதியினர் வழங்குகின்றனர்.

வதந்தி என்ற தலைப்போடு உருவாகியுள்ள இந்த புதிய தொடர் ஐந்து மொழிகளில் ரிலீஸ் ஆக உள்ளது. டிசம்பர் 2 ஆம் தேதி முதல் 5 மொழிகளில் ஸ்ட்ரீம் ஆக உள்ளது.