திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 20 பிப்ரவரி 2018 (13:33 IST)

ரோபோ மூலம் சாக்கடையை சுத்தம் செய்யும் கேரள அரசு

பாதாள சாக்கடையை சுத்தம் செய்யும் பணிக்கு ரோபோவை பயன்படுத்த கேரள அரசு முடிவு செய்த்துள்ளது.
 
பாதாளச் சாக்கடைகளில் உள்ள மனித கழிவுகளை, மனிதர்களே அள்ளுகிறார்கள், அதுவும் சில சமயம் சுத்தம் செய்யும்போது விஷவாயு தாக்கி உயிரிழந்து கொண்டு இருக்கிறார்கள்.
 
இதனை தடுக்கும் விதத்தில் கேரள அரசு ரோபோகளை கொண்டு பாதாள சாக்கடை 
சுத்தம் செய்ய முடிவு எடுத்துள்ளது. இதற்காக ரோபோவை சோதனையில் பயன்படுத்தி வெற்றியும் பெற்றுள்ளது.
 
ஜென்ரோபோடிக்ஸ் என்ற நிறுவனம் ரோபாவை தயாரித்து கேரளா அரசுக்கு கொடுத்துள்ளது. இந்த ரோபோவிற்கு பெருச்சாளி என பெயரிடப்பட்டுள்ளது. வரும் மார்ச் மாதம் முதல் ரோபோ தனது பணியைத் செய்ய உள்ளதாக கூறப்படுகுறது. 
 
இதனால் மனிதர்கள் சாக்கடையை சுத்தம் செய்யும் அவலம் நிகழாது. கேரளா முன்னெடுத்திற்கும் இந்த முயற்சியை மற்ற மாநிலங்களும் பின்பற்ற முன்வர வேண்டும்.