செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sivalingam
Last Modified: செவ்வாய், 1 அக்டோபர் 2019 (08:46 IST)

தோட்டம் வளர்த்து யூடியூபில் மாதம் ஒரு லட்சம் சம்பாதிக்கும் இளம்பெண்!

வீட்டின் பின்னால் உள்ள தோட்டத்தில் விதவிதமான மரங்கள், செடிகள் வளர்த்து அதன் மூலம் யூடியூப்பில் மாதம் ரூபாய் ஒரு லட்சம் ரூபாய் சம்பாதிக்கும் கேரள பெண் ஒருவர் குறித்த தகவல் வெளிவந்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது 
 
 
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் அங்கமாலி என்ற பகுதியைச் சேர்ந்த இளம்பெண் 
ஒருவர் தனது வீட்டின் தோட்டத்தில் சப்போட்டா, கொய்யா, மாம்பழம் உள்பட பல விதமான பழ மரங்கள் மற்றும் காய்கறி செடிகள் ஆகியவற்றை வளர்த்து வருகிறார் 
 
 
இந்த மரங்களின் புகைப்படத்தை எடுத்து அது வளரும் விதம், அதனால் கிடைக்கும் பலன்கள், தண்ணீர் மற்றும் உரம் போஅ வேண்டிய முறை ஆகியவற்றை யூடியூப்பில் இரண்டு நாட்களுக்கு ஒரு வீடியோவை பதிவு செய்துள்ளார் 
 
 
சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் இவர் தனது வீட்டு தோட்டத்தில் காய்கறிகள் மற்றும் பழ மரங்களை வளர்த்து வருவதாகவும், தான் பதிவு செய்யும் ஒவ்வொரு வீடியோவையும் லட்சக்கணக்கான பார்வையாளர்கள் பார்ப்பதால் தனக்கு மாதம் சுமார் ஒரு லட்ச ரூபாய் வருமானம் வந்து கொண்டிருப்பதாகவும் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
 
 
கடந்த 2012ஆம் ஆண்டு யூடியூப் சேனல் தொடங்கிய இவருக்கு தற்போது 3 லட்சம் ஃபாலோயர்கள் இருக்கின்றனர் என்பதும் இதுவரை இவரது வீடியோக்களை 2 கோடி பேர் பார்த்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
 
தோட்டம் வளர்ப்பதில் அதிக ஆர்வம் உள்ள இவர் தனது தோட்டத்தில் வளரும் காய்கறிகள் மற்றும் பழவகைகள் நன்றாக வளர்ந்ததால் இது குறித்து மக்களுக்கு தெரிவித்து ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே முதலில் வீடியோக்களை பதிவு செய்ததாகவும், அதன் பின் அதில் கிடைத்த வரவேற்பு மற்றும் வருமானம் அவரை மீண்டும் மீண்டும் வீடியோ அதிக வீடியோக்களை பதிவு செய்ய தூண்டியதாகவும் அந்த இளம் பெண் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்