புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 7 அக்டோபர் 2018 (13:00 IST)

தமிழகத்தில் மீண்டும் கனமழை - வானிலை ஆய்வு மையம்

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்புள்ளதால் தமிழகத்தில் கனமழை தொடரும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

 
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை பெய்ய ஆரம்பித்துள்ளதால் மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் வானிலை ஆய்வு மையம், தமிழகம் மற்றும் கேரளாவிற்கு அக்டோபர் 7(இன்று) ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்திருந்தது. இதனால் பொதுமக்கள் கடும் பீதியில் ஆழ்ந்திருந்தனர். ஆனால், ரெட் அலர்ட் வாபஸ் பெறப்பட்டதாக நேற்று அறிவிக்கப்பட்டது.
 
ஆனாலும்,சென்னை புறநகர் பகுதிகளான ஆவடி, திருநின்றவூர், தாம்பரம், பல்லாவரம், அம்பத்தூர் மற்றும் சென்னையில் எழும்பூர், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், தி.நகர் பகுதிகளில் தற்பொழுது மிதமான மழை பெய்து வருகிறது. குளிர்மையான காலநிலையால் மக்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
 
இந்நிலையில், தற்போது செய்தியாளர்களிடம் பேசிய சென்னை வானிலை மைய இயக்குனர் பாலசந்திரன்  “வட அந்தமான், தென் கிழக்கு வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருவாகி ஒரிசாவை நோக்கி நகர்கிறது. எனவே, அடுத்த 2 நாட்களில் தமிழகம் மற்றும் புதுசேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.  அரபிக்கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம். சென்னையில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்” என அவர் தெரிவித்தார்.