செவ்வாய், 21 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 13 பிப்ரவரி 2024 (10:02 IST)

ரேஷன் கடைகளில் பிரதமர் படங்களை வைக்க முடியாது: முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு..!

modii
ரேஷன் கடைகளில் பிரதமர் மோடி படத்தை வைக்க முடியாது என கேரள முதல்வர் பினராயி விஜயன் அதிரடியாக அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  
 
தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் பிரதமர் படங்களை வைக்க வேண்டும் என பாஜகவினர் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். ரேஷன் கடைக்கு வரும் அரிசி மானியமாக மத்திய அரசால் கொடுக்கப்படுவதால் பிரதமர் படம் வைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது. 
 
இந்த நிலையில் கேரளாவில் உள்ள ரேஷன் கடைகளில் முன்பு பிரதமர் மோடியின் பதாகைகளை வைக்க முடியாது என முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
 
 மேலும் ரேஷன் கடைகளை முன்பு பிரதமர் படம் அடங்கிய பதாகைகளை நிறுவ சொல்லி மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பி உள்ள நிலையில் இது ஒரு தேர்தல் ஸ்டண்ட் என்றும் இது தொடர்பாக தேர்தல் ஆணையிட்டம்  புகார் அளிக்க இருப்பதாகவும் சட்டப்பேரவையில் அவர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளிலும் பிரதமர் படத்தை வைக்க முடியாது என திமுகவினர் கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran