திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 11 பிப்ரவரி 2022 (07:46 IST)

உபி கேரளாவாக மாறினால் நல்லதுதான்: யோகிக்கு பினராயி விஜயன் பதிலடி!

உபி கேரளாவாக மாறினால் நல்லதுதான்: யோகிக்கு பினராயி விஜயன் பதிலடி!
உத்தரப்பிரதேச மாநிலத்தில் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்க வில்லை எனில் கேரளா போல் மாறிவிடும் என்று உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்ததற்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் பதிலடி கொடுத்துள்ளார். 
 
உத்திரப்பிரதேச மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்து வரும் முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரப்பிரதேசத்தில் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்க வில்லை எனில் இந்த மாநிலம் கேரளா, மேற்கு வங்கம் அல்லது காஷ்மீராக மாறிவிடும் என்று அச்சப்படுவதாக தெரிவித்தார்
 
இதற்கு பதிலடி கொடுத்துள்ள கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்கள் யோகி ஆதித்யநாத் பயப்படுவது போல கேரளா போல உத்தரப்பிரதேச மாறினால் ஒவ்வொருவருக்கும் நல்ல கல்வி சுகாதாரம் சமூக நலத்திட்டங்கள் கிடைக்கும் என்றும் மதம் மற்றும் ஜாதியின் பெயரால் மக்கள் கொலை செய்யப்பட மாட்டார்கள் என்றும் அனைவரும் நல்லிணக்கத்துடன் வாழலாம் என்றும் கூறியுள்ளார்
 
உத்தரப்பிரதேச முதல்வர் பதிலடி கொடுத்துள்ள கேரள முதல்வரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.