வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 26 டிசம்பர் 2019 (21:18 IST)

மீண்டும் விஜய்யுடன் இணைந்த ஆர்பி செளத்ரி

விஜய் நடித்த பல வெற்றி திரைப்படங்களை தயாரித்தவர் சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்பி சவுத்ரி என்பது தெரிந்ததே. தலைவா படத்திற்கு பிறகு ஆர்பி சவுத்ரி மீண்டும் விஜய் நடிக்கும் ஒரு படத்தை தயாரிக்க இருப்பதாகவும், அனேகமாக ’தளபதி 65’ படத்தை அவர் தயாரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டது 
 
இந்த நிலையில் அதற்கு முன்னரே விஜய்யுடன் ஆர்பி சவுத்ரி இணைந்த தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. தற்போது விஜய் நடித்து வரும் ’தளபதி 64’ படத்தின் வியாபாரங்கள் தொடங்கிவிட்ட நிலையில் இந்த படத்தின் கேரள மாநில ரிலீஸ் உரிமையை ஆர்பி சவுத்ரி ரூ 6 கோடிக்கு பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து ’தளபதி 64’ படத்தை கேரளாவில் பிரமாண்டமாக ரிலீஸ் செய்ய அனைத்து ஏற்பாடுகளும் தொடங்கிவிட்டன.
 
ஏற்கனவே ’தளபதி 64’ படத்தின் சேட்டிலைட் உரிமையை சன் டிவியும், டிஜிட்டல் உரிமையை அமேசான் நிறுவனமும் மிகப்பெரிய தொகைக்கு பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமை உள்பட மற்ற ரிலீஸ் உரிமைகளின் வியாபார பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் இது குறித்த தகவல்கள் விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது