செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 18 மே 2021 (08:26 IST)

லிவிங்ஸ்டன் படத்தில் பேசப்பட்ட கர்ணன் பட பிரச்சனை… ஆனால் அது வேற லெவல்!

லிவிங்ஸ்டன் நடிப்பில் வெளியான என் புருஷன் குழந்தை மாதிரி படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சி இப்போது கவனத்தை ஈர்த்துள்ளது.

2001 ஆம் ஆண்டு லிவிங்ஸ்டன், வடிவேலு மற்றும் தேவயாணி நடிப்பில் எஸ் பி ராஜ்குமார் இயக்கத்தில் வெளியான திரைப்படம் என் புருஷன் குழந்தை மாதிரி. அந்த படத்தில் இடம்பெறும் ஒரு நகைச்சுவை காட்சியில் பேருந்து நிலைய அறிவிப்பு பலகையில் பேருந்து நிறுத்தப் படாவிட்டால் நிறுத்தப்படும் என எழுதி இருக்கும். இப்போது சமீபத்தில் வெளிவந்த கர்ணன் திரைப்படத்திலும் தங்கள் ஊருக்கு பேருந்து நிற்க வேண்டும் என்பதே அந்த மக்களின் எதிர்பார்ப்பு. அதை அவர்கள் எப்படி நிறைவேற்றிக் கொள்கிறார்கள் என்பதே கதை. அதையும் லிவிங்ஸ்டன் பட புகைப்படத்தையும் பகிரும் நெட்டிசன்கள் மீம்ஸ்களாக பறக்கவிடுகின்றனர்.