Last Updated : திங்கள், 16 அக்டோபர் 2017 (12:35 IST)
பெங்களூர் சாலையில் டன் கணக்கில் துள்ளிய மீன்கள், அள்ளிய பொதுமக்கள்
பெங்களூர் சாலை ஒன்றில் மீன்களை ஏற்றி சென்ற லாரி ஒன்று விபத்துக்குள்ளானதை அடுத்து சுமார் இரண்டு டன்கள் மீன்கள் சாலையில் கொட்டியது.
சாலையில் துள்ளியபடி இருந்த இந்த மீன்களை அந்த பகுதியில் இருந்த பொதுமக்கள் வாளிகளில் அள்ளி எடுத்து சென்ற காட்சியின் வீடியோ சமூக வலைத்தளங்களில் மிக வேகமாக பரவி வருகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த அருகில் இருந்த கிராம மக்களும் வாளி, குடத்துடன் ஓடி வந்து மீன்களை அள்ளி சென்றனர். இதனால் இந்த பகுதியில் சில நிமிடங்கள் போக்குவரத்துக்கு தடை ஏற்பட்டது.