திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : வியாழன், 28 மார்ச் 2024 (14:14 IST)

டெல்லி முதல்வராக கெஜ்ரிவால் தொடருவார்..! பதவி நீக்கம் கோரிய மனு தள்ளுபடி.!!

arvind kejriwal
அரவிந்த் கெஜ்ரிவாலை டெல்லி முதல்வர் பதவியில் இருந்து நீக்கக் கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
 
மதுபான கொள்கை ஊழல் வழக்கில்  டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலை அமலாக்கத் துறை கடந்த 21-ம் தேதி கைது செய்தது.  அவரது கைதை கண்டித்து நாடு முழுவதும் ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதற்கு பல்வேறு கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்திருந்தனர்
 
இதனிடையே அரவிந்த் கெஜ்ரிவாலை டெல்லி முதல்வர் பதவியில் இருந்து நீக்க வலியுறுத்தி, டெல்லி உயர் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் கெஜ்ரிவாலுக்கு கட்டாய நடவடிக்கைக்கு எதிராக இடைக்கால பாதுகாப்பை வழங்க உயர்நீதிமன்றம் முன்பு மறுத்துவிட்டது என்பதை மனுவில் குறிப்பிட்டிருந்தனர். 
 
இந்நிலையில் இந்த மனுவை இன்று விசாரித்த டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள்,  இந்த விவகாரத்தில் டெல்லி துணை நிலை ஆளுநர் மற்றும் குடியரசு தலைவர் தான் முடிவெடுக்க முடியும் என்றும் நீதிமன்றம் எவ்வாறு தலையிட முடியும் என்றும் கேள்வி எழுப்பினர்.


கெஜ்ரிவாலை டெல்லி முதல்வர் பதவியில் இருந்து நீக்கக் கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.