வெள்ளி, 20 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : சனி, 13 ஜூலை 2024 (16:48 IST)

சிறையில் கெஜ்ரிவாலின் உயிருக்கு ஆபத்து.! பாஜக தான் காரணம்..! ஆம் ஆத்மி குற்றச்சாட்டு.!!

Sanjay Singh
டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் உடல் எடை 8.5 கிலோ குறைந்து, ரத்தத்தில் சர்க்கரை அளவும் கடுமையாக குறைந்துள்ளது என்றும் கெஜ்ரிவாலின் உயிருடன் மதிய பாஜக அரசு விளையாடுகிறது என்றும் ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை எம்.பி., சஞ்சய் சிங் கூறினார். 
 
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை சிறையில் இருந்து விரைவில் வெளியே கொண்டு வந்து மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என்றார். இல்லையென்றால் அவருக்கு ஏதேனும் மோசமான சம்பவம் நடக்கலாம் என்று அவர் அச்சம் தெரிவித்தார்.

அமலாக்கத் துறை அதிகாரிகள் மார்ச் 21ம் தேதி கெஜ்ரிவாலை கைது செய்தபோது அவரது எடை 70 கிலோவாக இருந்தது என்றும் தற்போது 61.5 கிலோவாக குறைந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். அதேபோல ரத்தத்தில் சர்க்கரை அளவும் கடுமையாக குறைந்துள்ளது என்றும் கூறினார். 
 
கெஜ்ரிவால் உடல்நிலை குறித்து அவரது குடும்பத்தினர், ஆம் ஆத்மி கட்சியினர் மற்றும் அவரது நலம் விரும்பிகள்  கவலை அடைந்துள்ளனர் என குறிப்பிட்ட சஞ்சய் சிங், கெஜ்ரிவாலை சிறையில் வைத்து அவரது உயிருடன் மத்திய அரசு விளையாடுவதாக தெரிவித்தார்.