செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : ஞாயிறு, 31 அக்டோபர் 2021 (17:55 IST)

கொரோனா தடுப்பூசி விலையை தானாக முன்வந்து குறைத்த நிறுவனம்!

கொரோனா தடுப்பூசி விலையை தானாக முன்வந்து குறைத்த நிறுவனம்!
12 வயதுக்குட்பட்டோருக்கான தடுப்பூசியின் விலையை அந்த தடுப்பூசியை தயாரித்த நிறுவனம் தானாக முன்வந்து விலைகுறைப்பு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது 
 
பதினெட்டு வயதுக்கு மேல் ஆனவர்களுக்கான தடுப்பூசிகள் கோவாக்சின், கோவிஷீல்டு மற்றும் ஸ்புட்னிக்வி  ஆகிய நிறுவனங்களின் தடுப்பூசிகள் அனுமதிக்கப்பட்டு உள்ளன என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தயாரிக்கப்பட்ட தடுப்பூசியை கேடிலா நிறுவனம் தயாரித்துள்ளது. சைகோவ்-டி என்ற இந்த தடுப்பூசி 3 டோஸ் ஆயிரத்து 900 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது மத்திய அரசின் வேண்டுகோளை ஏற்று கேடிலா நிறுவனம் தானாகவே விலையை குறைக்க முன் வந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன
 
இதன்படி ஒரு டோஸ் ரூபாய் 265 என்று குறைக்க முன்வந்துள்ளதாகவும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி 28 நாட்கள் இடைவெளியில் மூன்று நாட்கள் செலுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது