திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 21 டிசம்பர் 2023 (07:30 IST)

5 மாநில தேர்தல் முடிவுக்கு பிறகு பாஜக கூட்டணியை விரும்பும் அதிமுகவினர்: துக்ளக் ரமேஷ் கருத்து

ADMK
ஐந்து மாநில தேர்தல் முடிவுக்கு பின்னர் பாஜக கூட்டணியை அதிமுக விரும்புவதாக துக்ளக்  ரமேஷ் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த போது தெரிவித்துள்ளார். 
 
ஐந்து மாநில தேர்தலுக்கு முன்னர் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறி வந்த அதிமுக தனியாக ஒரு கூட்டணி அமைக்க முயற்சித்து வருகிறது 
 
அதுமட்டுமின்றி சிறுபான்மையினர் வாக்குகளையும் கவர நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால் அதிமுக எதிர்பார்த்தபடி  சிறுபான்மை வாக்குகள் கிடைக்கும் போல் தெரியவில்லை. 
 
அதேபோல்  தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளும் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க யோசித்து வருகின்றன. இந்த நிலையில் 5 மாநில தேர்தலில் பாஜக மூன்று மாநிலங்களில் வெற்றி பெற்றுள்ளதை அடுத்து 2024 தேர்தலிலும் அக்கட்சி ஆட்சியை மீண்டும் பிடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 
 
இதனை அறிந்த அதிமுகவின் சில தலைவர்கள் மீண்டும் பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம் என்று எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆலோசனை கொடுத்து வருவதாக துக்ளக் ரமேஷ்  ஊடகம் ஒன்று அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். அவர் சொன்னது போல் நடக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 
 
Edited by Siva