Daily Horoscope
✕

பாடாய் படுத்தும் வெயில்: செயற்கை மழைக்கு ப்ளானிங்!!

Updated: வியாழன், 16 மே 2019 (13:26 IST)
கர்நாடகாவில் அதிக வெயில் காரணமாக செயற்கை மழை பொழிவிக்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 
 
கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை வழக்கமாகவே நன்றாக பெய்யும். அதுவும் குறிப்பாக மங்களூரு, உடுப்பி, குடகு, மைசூரு ஆகிய பகுதிகளில் அதிக மழை பொழிவு இருக்கும். 
 
ஆனால், இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை 5 நாட்கள் தாமதமாக வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ஜூன் 6 ஆம் தேதி மழை துவங்கினாலும் மழை குறைவாகத்தான் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் இப்போதே தெரிவித்துவிட்டது. 
 
இதனால், கர்நாட அரசு செயற்கை மழையை பெய்விக்க முடிவு செய்துள்ளதாம். பெங்களூரு மற்றும் உப்பள்ளியில் இதற்கான மையங்கள்  ரூ.88 கோடி செலவில் அமைக்கப்பட உள்ளதாம். 
 
சுமார் 2 ஆண்டுகளுக்கு இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. கர்நாடகத்தில் இது போன்று ஏற்கனவே செயற்கை மழை பெய்விக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

எல்லாம் காட்டு

அலார்ட்டா இருக்கணும்!.. தவெகவை பகைத்துக்கொள்ளாத எ.வ.வேலு!.. அப்செட்டில் திமுக தலைமை!..

கண்டபடி திட்டினேன்!.. விஜய் ஒரு கோடி கொடுத்தார்!. கருணாஸ் பேட்டி!..

டாஸ்மாக் பார்களில் உணவுக்கூடம்(Resto Bar).. அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு...

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்.. ஒரு செங்கலை கூட வைக்க விடமாட்டோம்: ஜெயகுமார்

விஜய் லண்டனுக்கு ஜாலி டூர் போனாரா?!... எடப்பாடி பழனிச்சாமி நக்கல்...

அடுத்த கட்டுரையில்
Show comments