1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 6 மே 2019 (15:18 IST)

8 மணி நேரம் டிரெய்ன் லேட்: நீட் தேர்வை தவற விட்ட மாணவர்கள்

கர்நாடகாவில் ஹம்பி எக்ஸ்பிரஸ் ரயில் 8 மணி நேரம் தாமதமாக வந்ததால் மாணவர்கள் பலர் நீட் தேர்வு எழுத முடியாமல் போய்யுள்ளது. 
 
நாடு முழுவதும் நேற்று எம்.பி.பி.எஸ். உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு நடைபெற்றது. ஒடிசாவில் ஃபானி புயல் தாக்கத்தினால் அங்கு மட்டும் தேர்வு பின்னர் நடத்தப்படும் என முன்னரே அறிவிக்கப்பட்டது. 
 
இந்நிலையில், கர்நாடகாவில் ஹம்பி எக்ஸ்பிரஸ் ரயில் தாமதமாக வந்ததால் நூற்றுக்கு மேற்பட்ட மாணவர்கள் நீட் தேர்வு எழுத முடியாமல் போய்யுள்ளது. ஆம், காலை காலை 7 மணிக்கு பெங்களூரு வரும் ஹம்பி எக்ஸ்பிரஸ், நேற்று 8 மணி நேரம் தாமதமாக பகல் 2.36 மணிக்குத்தான் பெங்களூரு வந்ததுள்ளது. 
மாணவர்கள் தேர்வு அறைக்குள் 1.30 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுவர். எனவே இந்த ரயிலை நம்பி இருந்த மாணவ்ர்கள் தேர்வு எழுத முடியாமல் போய்விட்டது. இந்த மாணவர்களுக்கு மீண்டும் மறு தேர்வு நடத்த வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளது. 
 
கர்நாடக முதல்வர் குமாராசமியும், பிரதமர் மோடி, ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல், மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ஆகியோர் தலையிட்டு தேர்வை தவறவிட்ட மாணவர்களுக்கு மீண்டும் தேர்வெழுத அனுமதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.