வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 15 செப்டம்பர் 2020 (16:58 IST)

ஒரே நேரத்தில் இரண்டு கைகளாலும் எழுதும் சிறுமி… அதுவும் வேறு வேறு மொழியில்!

கர்நாடகாவில் சிறுமி ஒருவர் ஒரே நேரத்தில் இரண்டு கைகளாலும் எழுதும் ஆற்றல் பெற்றுள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் உள்ள மங்களூர் மாவட்டத்தைச் சேர்ந்த 16 வயது மாணவியான ஆதி ஸ்வரூபா தனது இரண்டு கைகளாலும் ஒரே நேரத்தில் எழுதும் திறன் பெற்றுள்ளார். அப்படி எழுதினாலும் ஒவ்வொரு கைகளாலும் நிமிடத்துக்கு 45 வார்த்தைகளை எழுதும் அளவுக்கு வேகமாக எழுதுகிறார். இதில் மற்றொரு சிறப்பு என்னவென்றால் வல்து கையால் ஒரு மொழியையும் இடது கையால் வேறொரு மொழியையும் எழுதும் அளவுக்குக் கூட அவர் தன் திறமையை வளர்த்துக் கொண்டுள்ளார்.

இதற்காக அவர் சிறுவயது முதலே பயிற்சியினை மேற்கொண்டு வருகிறாராம். இதற்காக அவரது பெற்றோர் அவருக்கு ஒன்றரை வயது முதல் பயிற்சி கொடுத்து வருகின்றனர். மாணவியின் திறமை பற்றிய செய்திகள் சமுகவலைதளங்களின் மூலம் இப்போது பரவ ஆரம்பித்துள்ளன.