1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 15 டிசம்பர் 2020 (13:02 IST)

சபாநாயகரை இழுத்து சென்று வெளியேற்றிய காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள்: சட்டசபையில் பரபரப்பு!

சபாநாயகரை இழுத்து சென்று வெளியேற்றிய காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள்:
கர்நாடக சட்டசபையின் மேலவைத் கூட்டம் இன்று நடைபெற்ற நிலையில் கர்நாடக மேலவையின் சபாநாயகரை வலுக்கட்டாயமாக காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளியேற்றியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
கர்நாடக சட்டசபையில் இன்று பசுவதை தடுப்பு சட்டம் நிறைவேற்ற திட்டமிடப்பட்டது. இந்த சட்டத்தை நிறைவேற்றக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ் உறுப்பினர்கள் வாதம் செய்து வந்தனர் 
 
ஒரு கட்டத்தில் திடீரென சபாநாயகரை காங்கிரஸ் உறுப்பினர்கள் இழுத்துச் சென்று வெளியேற்றினர். இதனால் காங்கிரஸ் மற்றும் பாஜக உறுப்பினர்கள் இடையே கைகலப்பு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
 
அவையின் சபாநாயகரையே அந்த எம்எல்ஏக்கள் இழுத்துச்சென்று வெளியேற்றியுள்ளது கர்நாடக மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது