செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 25 ஜூலை 2019 (20:57 IST)

மூன்று எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம்: சபாநாயகர் அதிரடியால் கர்நாடகாவில் பரபரப்பு

கர்நாடக மாநிலத்தில் சமீபத்தில் 13 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மற்றும் மூன்று மதச்சார்பற்ற எம்எல்ஏக்கள் திடீரென தங்கள் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ததால் அம்மாநிலத்தில் அரசியல் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் குமாரசாமி அரசு தோல்வி அடைந்ததால் அவரது ஆட்சி கவிழ்ந்தது
 
இந்த நிலையில் விரைவில் பாஜக கர்நாடாகாவில் ஆட்சி அமைக்க உரிமை கோரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் திடீர் திருப்பமாக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ரமேஷ் ஜார்கிஹோலி மற்றும் மகேஷ் கும்டஹள்ளி ஆகிய இருவரையும் வரும் 2023ஆம் ஆண்டு மே 16ஆம் தேதி வரை தகுதிநீக்கம் செய்யப்படுவதாக சபாநாயகர் அறிவித்துள்ளார். அதுமட்டுமின்றி சுயேச்சை எம்எல்ஏ சங்கரையும் சற்று முன்னர் அவர் தகுதி நீக்கம் செய்துள்ளார். ஒரே நாளில் 3 எம்எல்ஏக்களை சபாநாயகர் திடீரென தகுதி நீக்கம் செய்ததால் கர்நாடக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
ராஜினாமா செய்த 16 எம்எல்ஏக்களின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றுக்கொண்டால் மட்டுமே அம்மாநிலத்தின் பாஜக புதிய அரசு அமைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து அம்மாநிலத்தில் ஏற்படும் அடுத்த அரசியல் நிகழ்வு என்னவாக இருக்கும் என்பதை அறிய அரசியல் நோக்கர்களும் பொதுமக்களும் காத்திருக்கின்றனர்