1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By

இத்தனை அற்புத மருத்துவ குணங்களை கொண்டுள்ளதா ஏலக்காய்!!

ஏலக்காய் சமையலில் வாசனைக்காக சேர்க்கப்படும் ஏலக்காய் அசைவ உணவுகளுக்கு கூடுதல் சுவை சேர்க்கக்கூடியது. ஏலக்காய் ஒரு மசாலா பொருளாக மட்டும் அல்லாமல் மூலிகை பொருளாகவும் பயன்படுகிறது. 
ஏலக்காய் நமது உடல் மெட்டாபாலிசத்தை அதிகரித்து பித்த நீரை அதிகரித்து ஜீரண சக்தியை அதிகரிக்கிறது. எதுகளித்தல், வாய்வு தொல்லை  போன்றவற்றை சரியாக்குகிறது.
 
ஏலக்காய் தண்ணீரைக் குடித்தால் வாய்வுத் தொல்லை உடனே நீங்கிவிடும். விக்கலை போக்க இரண்டு ஏலக்காய்களை நசுக்கி, அத்துடன் புதினா இலைகளை காய்ச்சி வடிகட்டி குடித்தாலே போதும். 
 
வெயிலில் அதிகம் அலைந்தால் உண்டாகும் தலைசுற்றலை போக்க நான்கைந்து ஏலக்காய்களை கஷாயமாகக் காய்ச்சி, அதில் சிறிது  பனைவெல்லம் போட்டு குடித்தால் உடனே நீங்கும்.
வெயிலில் அதிகம் வியர்ப்பதால் ஏற்படும் தலைவலி, வாந்தி, குமட்டல், நீர்ச்சுருக்கு, மார்புச்சளி, செரிமானக் கோளாறு ஆகிய  பிரச்சினைகளுக்கு ஏலக்காயை வாயில் போட்டு மென்றாலே போதும்.
 
மன அழுத்தப் பிரச்சினை உள்ளவர்கள், ‘ஏலக்காய் டீ’ குடித்தால் இயல்பு நிலைக்கு வருவார்கள். டீத் தூள் குறைவாகவும், ஏலக்காய்  அதிகமாகவும் சேர்த்து டீ தயாரிக்கலாம்.
 
நான்கைந்து ஏலக்காய்களை நெருப்பில் போட்டு, அந்தப் புகையை குழந்தைகள் சுவாசித்தாலே மூக்கடைப்பு உடனே திறந்து கொள்ளும்.  
 
பச்சை ஏலக்காய் விட கருப்பு ஏலக்காய் மிகவும் சிறந்தது. ஏலக்காய் உங்கள் உடலில் தங்கியுள்ள கொழுப்பை கரைக்கிறது. மேலும் இரத்த  அழுத்தத்தை குறைக்கிறது.