திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 28 ஜூலை 2019 (12:26 IST)

மேலும் 14 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம்: கர்நாடக அரசியலில் பரபரப்பு

கர்நாடகாவில் அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் 14 பேரை சபாநாயகர் தகுதிநீக்கம் செய்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக முதல்வர் குமாரசாமியின் ஆட்சி மீது ஏற்பட்ட அதிருப்தியால் ஆட்சி கவிழ்க்கப்பட்டு எடியூரப்பா முதல்வர் ஆகியிருக்கிறார். எடியூரப்பா தனது பெரும்பான்மையை நிரூபிக்க நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்க இருக்கிறது. இந்நிலையில் 14 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே 3 எம்.எல்.ஏ-க்களை சபாநாயகர் ரமேஷ்குமார் தகுதி நீக்கம் செய்திருப்பதால், மொத்தன் 17 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

224 உறுப்பினர்களை கொண்ட கர்நாடக சட்டசபையில் 17 உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் உறுப்பினர் எண்ணிக்கை 207ஆக குறைந்துள்ளது. பெரும்பான்மையை நிரூபிக்க எடியூரப்பாவுக்கு 106 உறுப்பினர்கள் தயாராக இருக்கின்றனர். இந்த அதிரடி நடவடிக்கையால் எடியூரப்பா ஆட்சியமைப்பது கிட்டதட்ட முடிவாகிவிட்டது.

மேலும் தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்கள் 4 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது என்று சபாநாயகர் அறிவித்திருப்பது கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.