வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 28 மே 2018 (09:34 IST)

கார் விபத்தில் சிக்கி எம்.எல்.ஏ பரிதாப பலி

கர்நாடகாவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ சித்துநியாம் கவுடா கார் விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நடந்து முடிந்த கர்நாடக சட்டசபைத் தேர்தலில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால், முதல்வராக பதவியேற்றுக் கொண்ட எடியூரப்பா நம்பிக்கை வாக்கெடுப்பின் போது பதவி விலகினார். 117 எம்.எல்.ஏ க்களை தங்கள் வசம் வைத்துள்ள காங்கிரஸ் - மஜத கட்சி பெரும்பான்மையை நிரூபித்து மஜத தலைவர் குமாரசாமி கர்நாடக முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.
 
இந்நிலையில் கர்நாடக சட்டசபை தேர்தலில் ஜம்கண்டி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சித்துநியாம் கவுடா தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளரை 3000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
 
இந்நிலையில் கோவாவிலிரிந்து பகல்கோட்டுக்கு காரில் வந்துகொண்டிருந்த சித்துநியாம் கார் விபத்தில் சிக்கினார்.
 
இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். போலீஸார்  விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.