செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 8 ஜூலை 2019 (08:59 IST)

ராஜினாமா செய்த 13 எம்.எல்.ஏக்களுக்கும் அமைச்சர் பதவி: தொடங்கியது பேரம்

கர்நாடகாவில் ராஜினாமா செய்த 13 எம்.எல்.ஏக்களுக்கும் அமைச்சர் பதவி தர தயார் என முதல்வர் குமாரசாமி தரப்பில் இருந்து பேரம் தொடங்கியதாகவும், ஆனால் இந்த பேரத்திற்கு எம்.எல்.ஏக்கள் தயாராக இல்லை என்றும் செய்திகள் வெளிவந்துள்ளது
 
கர்நாடகாவில் குமாரசாமி தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் திடீரென 10 காங்கிரஸ் எம்.எல்.ஏக்களும், 3 மதச்சார்பற்ற எம்.எல்.ஏக்களும் ராஜினாமா செய்தனர். இதனால் குமாரசாமி அரசு போதிய ஆதரவு இல்லாமல் கவிழும் சூழல் உள்ளது
 
இந்த நிலையில் நேற்றிரவு முதல்வர் குமாரசாமி, முன்னாள் பிரதமர் தேவகவுடா உள்பட முக்கிய மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவர்கள் ஆலோசனையில் ஈடுபட்டனர். இதில் ராஜினாமா செய்த எம்.எல்.ஏக்கள் தங்கள் முடிவை வாபஸ் பெற்று திரும்பி வந்தால் அவர்கள் அனைவருக்கும் அமைச்சர் பதவி வழங்கப்படும் என பேரம் பேசியதாக கூறப்படுகிறது
 
ஆனால் அமைச்சர் பதவியை ஏற்று கொள்ள மாட்டோம் என்றும், ராஜினாமா முடிவில் மாற்றம் இல்லை என்றும் 10 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூறிவிட்டதாக தெரிகிறது. ஆனால் 3 எம்.எல்.ஏக்கள் முடிவில் மாற்றம் ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது