வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 21 மார்ச் 2022 (09:21 IST)

ஹிஜாப் வழக்கு: கொலை மிரட்டலை நீதிபதிகளுக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு!

கொலை மிரட்டலை தொடர்ந்து தலைமை நீதிபதி உட்பட 3 நீதிபதிகளுக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது என தகவல். 

 
கர்நாடகாவில் உடுப்பி கல்லூரியில் இஸ்லாமிய பெண்கள் ஹிஜாப் அணிந்து வர அரசு தடை விதித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து பல போராட்டங்கள் நடைபெற்ற நிலையில், இந்த வழக்கை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்றம் ஹிஜாப் அணிய அரசு விதித்த தடை செல்லும் என தீர்ப்பளித்தது.
 
இந்த தீர்ப்பை எதிர்த்து இஸ்லாமிய அமைப்புகள் பல போராட்டம் நடத்தி வருகின்றன. இந்நிலையில் தீர்ப்பை வழங்கிய நீதிபதிகளுக்கு சிலர் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து நடவடிக்கை எடுத்த கர்நாடக காவல்துறை கொலை மிரட்டல் விடுத்த இருவரை கைது செய்துள்ளனர்.
 
இந்நிலையில் கொலை மிரட்டலை தொடர்ந்து தலைமை நீதிபதி உட்பட 3 நீதிபதிகளுக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது என முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது, சமூக விரோதிகளின் இதுபோன்ற செயலை அரசு இரும்பு கரம் கொண்டு ஒடுக்கும். நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல் முறையீடு செய்வதற்கு வாய்ப்பு இருக்கும் போது இது போன்ற மிரட்டல்களில் ஈடுபடுவது நியாயம் கிடையாது என தெரிவித்துள்ளார்.