1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 15 மார்ச் 2022 (17:28 IST)

ஏன் இந்த ஹிஜாப் சர்ச்சை? தெலுங்கானா முதல்வர் கேள்வி!

ஹிஜாப் விவகாரம் தேவையற்றது என்றும் ஏன் இந்த ஹிஜாப் பிரச்சனை என்றும் தெலுங்கானா சட்டப்பேரவையில் அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் ஆவேசத்துடன் கேள்வி எழுப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
ஹிஜாப்உள்பட எந்த விதமான மத அடையாளத்துடன் கூடிய உடைக்கு அனுமதி இல்லை என கர்நாடக அரசு அரசாணை பிறப்பித்தது 
 
இந்த அரசாணையை எதிர்த்து மாணவிகள் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இன்று சட்டமன்றத்தில் பேசிய தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் யார் என்ன விதமான ஆடை அணிந்தால் அரசுக்கு என்ன பிரச்சனை? ஏன் இந்த ஹிஜாப் பிரச்சனை? தேவையில்லாமல் ஏன் பதட்டமான சூழலை உருவாக்குகிறார்கள் என்று கேள்வி எழுப்பினார். முதல்வரின் இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.