கர்நாடகாவில் மாஸ்க் கட்டாயம், புத்தாண்டுக்கு கட்டுப்பாடு!
இந்தியாவில் கொரோனா பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் கர்நாடகாவில் கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
உலகம் முழுவதும் பல நாடுகளில் கொரோனா பாதிப்புகள் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளதால் இந்தியாவில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா பரவாமல் தடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக சுகாதார துறை அமைச்சர், கர்நாடகாவில் பள்ளி, கல்லூரிகள் மற்றும் திரையரங்குகளில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் புத்தாண்டு கொண்டாட்டங்களில் பப்கள், உணவு விடுதிகள், பார்கள் மற்றும் மக்கள் கூடும் பகுதிகளில் மாஸ்க் அணிவது அவசியம் என்றும், இரவு 1 மணிக்கே புத்தாண்டு கொண்டாட்டங்கள் முடிவுக்கு வரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Edit By Prasanth.K