திங்கள், 10 நவம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 17 செப்டம்பர் 2025 (17:51 IST)

யூடியூப் சேனல்கள் லைசென்ஸ் எடுத்து செயல்பட வேண்டும்: அரசு பரிசீலனை..!

யூடியூப் சேனல்கள் லைசென்ஸ் எடுத்து செயல்பட வேண்டும்: அரசு பரிசீலனை..!
போலியான செய்திகளை பரப்பும் யூடியூப் சேனல்களை கட்டுப்படுத்த, அவற்றிற்கு லைசென்ஸ் வழங்கும் முறையை கொண்டுவர, கர்நாடக அரசு பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது. முதலமைச்சர் சித்தராமையா இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.
 
சமூக வலைத்தளங்களில், குறிப்பாக யூடியூப் சேனல்களில், போலியான செய்திகள் மற்றும் வதந்திகள் பரவுவது சமூக அமைதிக்குக் குந்தகம் விளைவிப்பதாக கர்நாடக அரசு கருதுகிறது. சமூகத்தில் தீங்கு விளைவிக்கும் இத்தகைய போக்கை தடுக்கவே, இந்த நடவடிக்கை குறித்து அரசு சிந்தித்து வருகிறது.
 
மின்னணு ஊடகப் பத்திரிகையாளர்கள் சங்கம், யூடியூப் சேனல்களுக்கு உரிமம் வழங்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்த நிலையில், கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.
 
இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால், யூடியூப் சேனல்களின் செயல்பாடு கட்டுப்படுத்தப்படும் என்றும், போலி செய்திகள் பரவுவது குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran