1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 5 டிசம்பர் 2019 (07:10 IST)

பாஜக அரசின் தலைவிதியை நிர்ணயிக்கும் இடைத்தேர்தல்: கர்நாடகத்தில் வாக்குப்பதிவு தொடங்கியது

கர்நாடக மாநிலத்தில் முதலமைச்சர் எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசின் தலைவிதியை நிர்ணயிக்கும் இடைத்தேர்தல் சற்றுமுன்னர் வாக்குப்பதிவு தொடங்கியது 
 
கர்நாடக மாநிலத்தின் முதல்வராக கடந்த மே மாதம் எடியூரப்பா பதவி ஏற்றுக்கொண்டார். காங்கிரஸ் மற்றும் குமாரசாமி தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதா ஆட்சிக்கு ஆதரவு கொடுத்து வந்த 17 எம்எல்ஏக்கள் திடீரென கட்சி தாவி வாபஸ் பெற்றதால் குமாரசாமி தலைமையிலான ஆட்சி கவிழ்ந்தது 
 
இதனை அடுத்து பாஜகவின் ஆட்சி தற்போது அங்கு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கட்சி தாவிய 17 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் அந்த 17 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த இடைத்தேர்தல் வாக்குப் பதிவு சற்று முன்னர் அதாவது காலை 7 மணிக்கு தொடங்கியது. இந்த வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது 
 
15 தொகுதிகளில் நடைபெறும் இந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளில் வென்றால் மட்டுமே பாஜகவின் ஆட்சி நீடிக்கும் என்பதால் பாஜகவின் ஆட்சியை நிர்ணயிக்கப் போகும் இடைத்தேர்தலாக இந்த தேர்தல் கருதப்படுகிறது. ஒருவேளை 6 தொகுதிகளில் பாஜக வெற்றி பெறவில்லை என்றால் மீண்டும் குமாரசாமி தலைமையிலான ஆட்சி கர்நாடகத்தில் அமைய வாய்ப்பு இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன