வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 4 ஜூன் 2024 (16:29 IST)

கங்கனா ஹிட்.. ஸ்மிருதி அவுட்..! அமைச்சர் பதவிக்கு இடம் காலி! – அமைச்சராக்க பாஜக ப்ளான்?

Kangana Renaut, Smirthi Irani
இமாச்சல பிரதேசத்தில் பாஜக சார்பில் போட்டியிட்ட கங்கனா ரனாவத் வெற்றி பெற்ற நிலையில் அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என பேச்சுகள் எழுந்துள்ளது.



இந்தியாவில் உள்ள 543 தொகுதிகளுக்கான தேர்தல் நடந்து முடிந்த நிலையில் இன்று வாக்குகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. பிரபல இந்தி நடிகையான கங்கனா ரனாவத் பல ஆண்டுகளாக பாஜகவுக்கு ஆதரவான கருத்துகளை தொடர்ந்து பேசி வந்தவர். இந்நிலையில் இந்த முறை தேர்தலில் பாஜக சார்பில் அவரது சொந்த மாநிலமான இமாச்சல பிரதேசத்தில் மண்டி தொகுதியில் போட்டியிட்டார்.

தற்போது தேர்தல் முடிவில் 5.25 லட்சம் வாக்குகளை பெற்றுள்ள கங்கனா ரனாவத் 72,696 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். பாஜகவின் இணைந்து குறுகிய காலத்திலேயே, அதுவும் தான் போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார் கங்கனா ரனாவத்.


அதேசமயம் கடந்த தேர்தலில் ராகுல் காந்தியையே வீழ்த்தி வென்ற மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி காங்கிரஸ் வேட்பாளரிடம் தோல்வியடைந்துள்ளார். தற்போது பாஜகவின் முகமாக பிரபலமாக அறியப்படுபவராக கங்கனா மாறியுள்ள நிலையில் பாஜக ஆட்சியமைத்தால் கங்கனா ரனாவத்துக்கு அமைச்சர் பதவி கொடுப்பதற்கு பாஜக தலைமை ஆலோசித்து வருகிறதாம்.

தற்போது ஸ்மிருதி இரானி இந்த தேர்தலில் தோல்வி அடைந்துவிட்டதால் அவர் வகித்த பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் பதவியை கங்கனாவுக்கு வழங்க வாய்ப்புள்ளதாக பேசிக் கொள்ளப்படுகிறது.

Edit by Prasanth.K