திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 2 செப்டம்பர் 2019 (15:25 IST)

நான் வயதானவன், என்னை திகார் சிறைக்கு அனுப்ப வேண்டாம்: ப சிதம்பரம் கோரிக்கை

எனக்கு 74 வயது ஆகிறது என்பதால் என்னை திகார் சிறைக்கு அனுப்ப வேண்டாம் என சிதம்பரம் தரப்பில் வாதம் செய்யப்பட்டது 
 
 
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ காவல் முடிவடைந்த நிலையில் இன்று ப சிதம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார். இந்த நிலையில் சிபிஐ காவல் இன்றுடன் முடிவடைவதால் அவருக்கு ஜாமீன் கிடைக்காவிட்டால் திகார் சிறையில் அடைக்கப்படுவார் என்ற நிலை இருந்தது. 
 
 
இந்த நிலையில் ப சிதம்பரம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட முன்ஜாமீன் வழக்கு வரும் வெள்ளிக்கிழமை தீர்ப்பு வழங்கப்படும் என்பதால் அது வரை இடைக்கால ஜாமீன் தரவேண்டும் என்ற கோரிக்கை ப.சிதம்பரம் தரப்பில் வைக்கப்பட்டுள்ளது. தனக்கு 74 வயதாகிறது என்பதால் வெள்ளிக்கிழமை வரை தன்னை ப. சிதம்பரம் கேட்டுக்கொண்டுள்ளார் 
 
 
இதனையடுத்து நீதிபதிகள் வரும் வெள்ளி வரை சிதம்பரத்தை திகார் சிறைக்கு அனுப்ப கூடாது என்றும் அவர் இடைக்கால ஜாமீன் மனு தாக்கல் செய்யலாம் என்றும் குறிப்பிட்டனர். எனவே மூன்று நாட்களுக்கு ப.சிதம்பரம் திகார் சிறைக்கு செல்வதில் இருந்து தப்பித்துள்ளதாக கூறப்படுகிறது