1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 26 ஆகஸ்ட் 2022 (15:09 IST)

உக்ரைன் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல்...பலி எண்ணிக்கை உயர்வு ! ஐ.நா., எச்சரிக்கை!

Ukraine war
உலகில் வல்லரசு நாடான ரஷ்யா, அதன் அண்டை நாடான உக்ரைன் மீது ராணுவப் படையெடுத்துத் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

6 மாதங்களாக நடந்து வரும் இந்தப் போரில் இரு தரப்பிலும் பல ஆயிரக்கணக்கான வீரர்களும், பொதுமக்களும் உயிரிழந்துள்ளனர்.

ரஷ்யாவை எதிர்த்துப் போரிட சமீபத்தில், அமெரிக்கா நாடு பல ஆயிரம் கோடியில் ராணுவப் தளவாடங்கள் வாங்க நிதி உதவி செய்துள்ளது.

இந்த நிலையில், உக்ரைன் ரயில் நிலையத்தில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியது.. இந்தத் தாக்குதலில் 25 பேர் உயிரிழந்துள்ளனர்.

 கடந்த 24 ஆம் தேதிதான் உக்ரன் நாடு சுதந்திர தினம் கொண்டாடியது. இந்த நிலையில் இன்று  நேற்று முன் தினம் ராணுவ ரயில் மீது  நடந்த இத்தாக்குதலில், 20 பேர் பேர் உயிரிழந்தனர், சுமார் 50க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். தற்போது பலி எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

ஐநாசபையும் ஐரோப்பிய  நாட்டுத்ந்தலைவர்களுக்கும் ரஷ்யாவின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.