வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 18 அக்டோபர் 2022 (18:41 IST)

தமிழகம் உள்பட 8 மாநிலங்கள் வாட் வரியை குறைக்க வேண்டும்: மத்திய அமைச்சர்

Jyotiraditya Scindia
தமிழகம் உள்பட 8 மாநிலங்கள் வாட் வரியை குறைக்க வேண்டும் என மத்திய அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா தெரிவித்துள்ளார் 
 
விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா இன்று மாநாடு ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது அவர் தமிழகம், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், டெல்லி, ராஜஸ்தான், பீகார், பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் விமான எரிபொருள் மீதான வாட் வரியை குறைக்க வேண்டும் என்றும் அப்போதுதான் விமான போக்குவரத்து துறை வளர்ச்சி அடைய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்
 
விமான எரிபொருள் மீதான மதிப்பு கூட்டு வரியை குறைக்க வேண்டும் என்பதை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என்றும் உங்களது மாநிலங்களில் விமான போக்குவரத்து வசதியை அதிகரிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்
 
மத்திய அமைச்சரின் இந்த வேண்டுகோளை ஏற்று தமிழகம் உள்பட 8 மாநிலங்கள் விமான எரிபொருளுக்கான வாட் வரியை குறைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
 
Edited by Siva