ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 18 அக்டோபர் 2022 (12:39 IST)

போனஸாகா கார், பைக் வழங்கிய நகைக்கடை உரிமையாளர்!

நகைக்கடை உரிமையாளர், தீபாவளிக்கு தனது ஊழியர்களுக்கு பைக் மற்றும் கார்களை பரிசாக வழங்கினார்.


சென்னையில் உள்ள பிரபல நகைக்கடை நிறுவனமான சல்லானி ஜூவல்லரியின் உரிமையாளர் தீபாவளிக்கு தனது ஊழியர்களுக்கு பைக் மற்றும் கார்களை போனஸ் பரிசாக வழங்கினார். இதன் உரிமையாளர் ஜெயந்தி லால் சாய்ந்தி, எட்டு பேருக்கு கார், 18 பேருக்கு பைக்குகள் வாங்க, 1.2 கோடி ரூபாய் செலவு செய்தார்.

இது குறித்து பேசிய ஜெயந்தி லால், தனது ஊழியர்கள் குடும்பத்தைப் போன்றவர்கள், அவர்கள் உயர்வு மற்றும் தாழ்வுகளில் எனக்கு ஆதரவளித்தனர். இது அவர்களின் வாழ்க்கையில் ஏதாவது ஒரு சிறப்பு சேர்க்க வேண்டும். எனது வியாபாரத்தில் ஏற்ற தாழ்வுகள் அனைத்திலும் என்னுடன் இணைந்து பணியாற்றி லாபம் ஈட்ட உதவினார்கள்.

ஜெயந்தி லால் மேலும் கூறுகையில், தனது ஊழியர்களை தனது குடும்ப உறுப்பினர்களைப் போல நடத்த விரும்புவதாகவும், அவர்களுக்கு இதுபோன்ற ஆச்சரியங்களை வழங்குவதாகவும் கூறினார். கடையின் உரிமையாளர் மேலும் கூறுகையில், தான் முழு மனதுடன் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், அதிகமான முதலாளிகள் இதைப் பின்பற்றி, தங்கள் ஊழியர்களுக்கு அதிக பரிசுகளை வழங்குவதன் மூலம் அவர்களை மதிக்க வேண்டும் என்றும் கூறினார்.
 
Edited By: Sugapriya Prakash