செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 23 ஜனவரி 2020 (20:06 IST)

அரசுக்கு ரூ.195 கோடி செலுத்திய ஜியோ: ஏன் தெரியுமா?

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவின்படி, 195 கோடி ரூபாய் நிலுவைத்தொகையை அரசுக்கு செலுத்தி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
சமீபத்தில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி சரி செய்யப்பட்ட மொத்த வருவாய் அடிப்படையில் தொலைதொடர்பு நிறுவனங்கள் ஜனவரி 23ஆம் தேதிக்குள், நிலுவை தொகையை செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த தொகையை செலுத்த தங்களுக்கு கால அவகாசம் வேண்டும் என்றும், தவணை முறையில் செலுத்த அனுமதி வேண்டும் என்றும் வோடாபோன், ஏர்டெல் ஆகிய நிறுவனங்கள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ள நிலையில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் எந்தவித கோரிக்கையையும் வைக்காமல் ரூ.195 கோடி ரூபாயை அரசுக்கு கட்டிவிட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது
 
இந்த நிலையில் அவகாசம் கேட்டு மனுதாக்கல் செய்த வழக்கின் விசாரணை விரைவில் நடைபெறவிருப்பதாக தெரிகிறது.