திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 7 ஜனவரி 2020 (12:55 IST)

ஒரே நாளில் டிரெண்ட் ஆன தனுஷின் இரண்டு படங்கள்!

தனுஷ் நடித்த ’பட்டாஸ்’ திரைப்படத்தின் டிரைலர் சற்று முன்பு வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வரும் நிலையில் தனுஷ் நடித்த அடுத்த படத்தின் டைட்டில் குறித்து அறிவிப்பு வெளிவந்து, இரண்டு படங்களும் தற்போது டுவிட்டரில் டிரெண்ட் ஆகியுள்ளது 
 
தனுஷின் ’பட்டாஸ்’ திரைப்படத்தின் டிரைலர் அட்டகாசமாக இருப்பதாக தனுஷ் ரசிகர்கள் மட்டுமின்றி சினிமா ரசிகர்கள் அனைவரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில், சற்று முன்னர் ரிலையன்ஸ் நிறுவனம் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் இந்த வருடம் இந்நிறுவனம் வெளியிட இருக்கும் படங்ககளின் பட்டியல்களை வரிசைப்படுத்தி உள்ளது. அதில் தர்பார் உட்பட பல திரைப்படங்களில் இருந்து வரும் நிலையில் கடைசியாக தனுஷ் நடித்த சுருளி என்ற திரைப்படமும் இருப்பதாக குறிப்பிட்டுள்ளது 
 
தனுஷ், கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவான திரைப்படத்திற்கு சுருளி என்ற டைட்டில் வைக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டு வரினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்னும் வெளிவரவில்லை. ஆனால் தற்போது ரிலையன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள இந்த வீடியோவில் இருந்து சுருளி டைட்டில் தான் இந்த படத்திற்கு வைக்கப்பட்டு உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த டைட்டில் குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு பட்டாஸ் திரைப்படத்தின் ரிலீஸுக்கு பின்னர் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது