1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 29 அக்டோபர் 2021 (19:50 IST)

ரூ.1999க்கு ஜியோ நெக்ஸ்ட் போன்: ரிலையன்ஸ் அறிவிப்பு!

கூகுள் மற்றும் ஜியோ நிறுவனங்கள் இணைந்து வழங்கவுள்ள ஜியோ போன் நெக்ஸ்ட் என்ற ஸ்மார்ட்போனை ரூபாய் 1999 முன்பணம் கொடுத்து பெற்றுக் கொள்ளலாம் என ரிலையன்ஸ் நிறுவனத்தின் முகேஷ் அம்பானி அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
ஜியோ நெக்ஸ்ட் போன் வரும் தீபாவளி அன்று வெளியாக இருப்பதாகவும் இந்த போனின் விலை ரூபாய் 6499 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போன் 18 மற்றும் 24 மாத பிளான்களை கொண்ட ஜியோ சிம் கார்டுடன் வெளியாகிறது என்றும் இந்த போனை ரூபாய் 1999 மட்டும் முன் பணம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
அதுமட்டுமின்றி ஜியோ மார்ட்டின் சில்லரை விற்பனை நிலையம், jio.com மற்றும் வாட்ஸ் அப்பில் குறுந்தகவல் அனுப்பிய இந்த போனை பெற்றுக்கொள்ளலாம் என தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த போனுக்கு ஏராளமான முன்பதிவு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது