ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 15 டிசம்பர் 2021 (19:57 IST)

ஒரு ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்யலாம்: ஜியோ அதிரடி அறிவிப்பு

ஒரு ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்யலாம் என ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
சமீபத்தில் ஜியோ நிறுவனம் ப்ரீபெய்டு கட்டணத்தை உயர்த்தியதால் அதிருப்தியில் இருக்கும் வாடிக்கையாளர்களை குஷிப்படுத்துவதற்காக ஒரு ரூபாய்க்கு 100 எம்பி என்று டேட்டா சலுகையை ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது
 
10 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் ஒரு ஜிபி டேட்டா இண்டர்நெட் டேட்டா கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. உலகிலேயே ஒரு ரூபாய்க்கு இன்டர்நெட் டேட்டா ரீசார்ஜ் செய்யும் முறையை ஜியோ நிறுவனம் அறிவித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இதனால் ஜியோ நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் தேவையான அளவுக்கு இன்டர்நெட் டேட்டா ரீசார்ஜ் செய்து கொள்ளலாம் என்பதும் குறைந்தபட்சம் ஒரு ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்து கொள்ளலாம் என்பதும் வாடிக்கையாளர்களுக்கு கிடைத்த மிகப்பெரிய சாதனையாக கருதப்படுகிறது