தனியார் பள்ளிகளை குறி வைத்த ஆந்திரா முதல்வர்.. ஜெகன் மோகனின் அடுத்த அதிரடி
பள்ளி, கல்லூரிகளில் கல்வியை ஒழுங்குபடுத்த ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ஒரு அதிரடி மசோதாவை தாக்கல் செய்துள்ளார்.
ஜெகன் மோகன் ரெட்டி ஆந்திராவின் முதலமைச்சராக பதவி ஏற்றதிலிருந்து, வேலை வாய்ப்பு, இட ஒதுக்கீடு ஆகிய பல துறைகளில் அதிரடி அறிவிப்புகளை அறிவித்து வருகிறார். இந்நிலையில் தற்போது பள்ளி மற்றும் கல்லூரிகளில் கல்வியை ஒழுங்குப்படுத்தவும், கல்வி வியாபாரமயமாவதை தடுக்கவும், ஒரு அதிரடி மசோதாவை சட்டமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.
அந்த மசோதாவில் தனியார் பள்ளிகளின் கட்டணத்தை முறைப்படுத்தவும், கல்வியின் தரத்தை அதிகரிக்கவும், பள்ளிகள் மற்றும் மாணவர்களின் செயல்களை கண்காணிக்கவும் இரண்டு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் அமைச்சர்களுக்கு சொந்தமான பல கல்லூரிகளிலும் பள்ளிகளிலும் லட்சக்கணக்காக கட்டணம் வசூலிக்கப்படுவதை தடுக்கவே இந்த மசோதாவை கொண்டுவந்துள்ளதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.