திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 30 நவம்பர் 2019 (13:05 IST)

ஆஹா ஓஹோனு ஏகத்துக்கும் சிஎம்-ஐ புகழ்ந்து தள்ளிய ரோஜா: குஷியில் ஈபிஸ்!

எடப்பாடி பழனிச்சாமி தமிழ்காத்தில் ஆளுமைமிக்க தலைவராகவே இருக்கிறார் என ஆந்திர பிரதேச எம்எல்ஏ ரோஜா பேசியுள்ளார். 
 
நடிப்பை ஓரம் கட்டிவிட்டு அரசியலில் ஈடுப்பட்டுள்ள நடிகை ரோஜா தற்போது ஆந்திரபிரதேசத்தில் உள்ள நகரி தொகுதியின் எம்.எல்.ஏ-வாக உள்ளார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் எடப்பாடி பழனிச்சாமியை புகழ்ந்து பேசியுள்ளார். 
 
அவர் பேசியதாவது, ஜெயலலிதா இறந்த பின் நானும் தமிழக அரசியலை கவனிப்பதை நிறுத்திவிட்டேன். ஆனால் என்னுடைய தொகுதியில் பல இடங்கள் தமிழகத்தின் எல்லையில் இருப்பதால் தமிழக அரசியல் குறித்து அவர்கள் பேசி கேட்டிருக்கிறேன். 
 
தமிழக முதல்வர் சாதாரண பின்னணியில் இருந்து வந்தார். ஆனால் இப்போது அவர் கட்சியை சிறப்பாக வழி நடத்துகிறார். இப்போது இருப்பவர் நன்றாக ஆட்சி செய்கிறார்.நல்ல தலைவராக உருவெடுத்துள்ளார். அதிமுக இல்லாமல் போகும் என்று நினைத்த போது அவர் கட்சியை முன்னுக்கு கொண்டு சென்றுள்ளார். 
 
ஜெயலலிதா இருந்த போது அவர் முகத்தை கூட பார்த்தது இல்லை. ஆனால் இப்போது தனிப்பட்ட வகையில் அவர் முக்கிய தலைவராக உருவெடுத்து இருக்கிறார். அவரிடம் ஆளுமை இருக்கிறது என தெரிவித்துள்ளார்.