திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 27 நவம்பர் 2019 (22:33 IST)

வீடு திரும்பினார் கமல்ஹாசன்: ‘இந்தியன் 2’ படப்பிடிப்பில் எப்போது?

உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தனது வீட்டின் மாடிப் படிகளில் தவறி விழுந்ததால் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதற்காக அப்போது சிகிச்சையின்போது வைக்கப்பட்ட பிளேட்டை தற்போது நீக்குவதற்காக சமீபத்தில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அந்த பிளேட்டை நீக்குவதற்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில் ஓரிரு நாட்கள் அவர் மருத்துவமனையிலிருந்து சிகிச்சை பெற்றார்
 
இந்த நிலையில் சற்றுமுன் கமல்ஹாசன் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பியுள்ளார். இதனையடுத்து அவர் ஒரு சில வாரங்கள் முழு ஓய்வு எடுக்க வேண்டும் என்றும் அதனை அடுத்து அவர் படப்பிடிப்பு மற்றும் அரசியல் பணிகளுக்கு செல்ல வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
 
இதனை அடுத்து டிசம்பர் மாதம் முழுவதும் கமல்ஹாசன் ஓய்வு எடுப்பார் என்றும் ஜனவரி முதல் அவர் தனது வழக்கமான பணிகளை தொடங்குவார் என்றும் கமல்ஹாசன் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது
 
இதனால் ’இந்தியன் 2’ படப்பிடிப்பில் அவர் ஜனவரி மாதமே செல்ல வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல் தனது அரசியல் பணிகளையும் அவர் ஜனவரி மாதமே தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
இந்த நிலையில் டிசம்பர் மாதம் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் வாய்ப்பு இருந்தால் அந்த தேர்தலில் கமல்ஹாசன் பிரச்சாரத்திற்கு செல்வது சந்தேகமே என்று அவரது வட்டாரங்கள் கூறுகின்றன