தமிழிலும் ஜே.ஈ.ஈ தேர்வுகள்: மத்திய அமைச்சர் அறிவிப்பு
நாடு முழுவதிலும் உள்ள இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் இணைந்து படிப்பதற்கு ஜே.ஈ.ஈ நுழைவுத்தேர்வு அவசியம் என்பது தெரிந்ததே
ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் இந்தத் தேர்வுகள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே இதுவரை நடத்தப்பட்டு வருகிறது. ஜே.ஈ.ஈ தேர்வுகளை பிராந்திய மொழிகளிலும் நடத்தப்பட வேண்டும் என தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்கள் கோரிக்கை விடுத்தனர்
இந்த கோரிக்கை தற்போது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. ஜே.ஈ.ஈ முதன்மை தேர்வு மற்றும் அட்வான்ஸ் தேர்வு ஆகிய இரு கட்டங்களாக நடத்தப்படும் ஜே.ஈ.ஈ தேர்வுகள் இனிமேல் பிராந்திய மொழியில் நடத்தப்படும் என்று மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் அவர்கள் தெரிவித்துள்ளார்
மத்திய அமைச்சரின் இந்த அறிவிப்பை தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களும் வரவேற்று உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது