1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. JEE exam date announced by educational minsiter

2021ஆம் ஆண்டின் JEE தேர்வுகள் எப்போது? மத்திய அமைச்சர் அறிவிப்பு!

JEE தேர்வு
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்களிலும் தேசிய அளவிலும் பல்வேறு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது 
 
ஆனால் அதே நேரத்தில் நீட் மற்றும் JEE தேர்வுகளை மட்டும் நடத்தியே தீருவது என்று மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியானது. இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி JEE தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது 
 
மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அவர்களின் டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின் படி இந்த ஆண்டின் JEE தேர்வுகள் நடைபெறும் தேதி குறித்த விபரங்கள் பின்வருமாறு:
 
ஜே.ஈ.ஈ மூன்றாம் கட்டத் தேர்வு ஜூலை 20 முதல் ஜூலை 25 வரையும், நான்காம் கட்டத் தேர்வு ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 2 வரையும் நடைபெறும் என மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷான்க் அறிவித்துள்ளார்.
 
 
About Writer
siva
அடுத்த கட்டுரையில்
ஒலிம்பிக் செல்லும் தமிழ்நாடு வீரர்களுக்கு ஊக்கத்தொகை: முதலமைச்சர் உத்தரவு