ஹரியானாவை அடுத்து ஜம்மு காஷ்மீரிலும் இந்தியா கூட்டணி ஆட்சி? முன்னிலை நிலவரம்..!
ஹரியானா மற்றும் ஜம்மு காஷ்மீரில் சமீபத்தில் சட்டமன்றத் தேர்தல் நடந்த நிலையில், ஹரியானாவில் காங்கிரஸ் கூட்டணி, இந்தியா கூட்டணி கிட்டத்தட்ட ஆட்சியைப் பிடித்து விட்டதாகவே கருதப்படுகிறது.
இந்த நிலையில், காஷ்மீரில் தற்போது பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், இந்த மாநிலத்திலும் இந்தியா கூட்டணி முன்னிலையில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.
தேசிய மாநாடு கட்சியின் மற்றும் காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிட்ட நிலையில், இந்த கூட்டணி 43 இடங்களில் முன்னிலையில் உள்ளதாகவும், பாஜக 27 இடங்களிலும், மக்கள் ஜனநாயக கட்சி ஏழு இடங்களிலும், மற்றவர்கள் 13 இடங்களிலும் முன்னிலையில் இருப்பதாக தெரிகிறது.
இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில், ஆரம்ப முதலே இந்தியா கூட்டணி முன்னிலையில் இருப்பதால் ஜம்மு காஷ்மீர், ஹரியானா ஆகிய இரண்டு மாநிலங்களிலும் இந்தியா கூட்டணி ஆட்சி தான் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Edited by Mahendran