1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 28 ஜூலை 2024 (18:06 IST)

ஜம்மு எல்லை பகுதியில் ஒரு இன்ச் கூட விடாமல் சீல் வைக்கப்படும்: டிஜிபி அறிவிப்பு..!

border security
ஜம்முவில் உள்ள சர்வதேச எல்லை பகுதிகள் முழுவதும் ஒரு இன்ச் கூட விடாமல் சீல் வைக்கப்படும் என ஜம்மு டிஜிபி தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஜம்மு காஷ்மீரில் நேற்று பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவும்போது நடந்த சண்டையில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார் என்பதும் நான்கு வீரர்கள் காயமடைந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில நாட்களாக தீவிரவாதிகள் ஜம்மு பகுதியில் ஊடுருவ முயற்சித்து வரும் நிலையில் சர்வதேச எல்லை பகுதிகள் முழுவதும் ஒரு இன்ச் இடம் கூட விடாமல் சீல் வைக்கப்படும் என ஜம்மு காஷ்மீர் காவல் துறை டிஜிபி தெரிவித்துள்ளார்.

மேலும் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படும் இடங்களில் உள்ளூர் இளைஞர்கள் குழு அமைக்கப்பட்டு ராணுவத்தில் அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்

ஜம்முவில் கடந்த சில ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தல் நடவடிக்கைகள் இல்லாமல் இருந்த நிலையில் தற்போது சில பயங்கரவாதிகள் ஊடுருவ முயற்சித்து வருகிறார்கள் என்றும் எனவே பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்

Edited by Siva