செவ்வாய், 9 ஜூலை 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 9 ஜூலை 2024 (09:07 IST)

காஷ்மீரில் பயங்கரவாதிகள் குண்டு வீச்சு! 5 ராணுவ வீரர்கள் வீர மரணம்!

Kashmir

காஷ்மீரில் நாளுக்கு நாள் பயங்கரவாதிகள் தாக்குதல் அதிகரித்து வரும் நிலையில் தற்போது ராணுவ வீரர்கள் வாகனங்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் வீர மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காஷ்மீரில் பல ஆண்டுகளாகவே பயங்கரவாதிகள் ஊடுறுவலும் தாக்குதல் சம்பவங்களும் தொடர் கதையாக இருந்து வருகிறது. காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு பின்னர் அங்கு இந்திய ராணுவத்தின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. எனினும் அவ்வபோது பயங்கரவாத தாக்குதல் தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில் காஷ்மீரின் கத்துவா பகுதியில் ராணுவ ரோந்து வாகனங்கள் சென்றுக் கொண்டிருந்தபோது திடீரென பயங்கரவாதிகள் சிலர் வாகனங்கள் மீது கையெறிக் குண்டுகளை வீசி தாக்கியுள்ளனர். மேலும் துப்பாக்கிச்சூடும் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் பயங்கரவாதிகளை எதிர்த்து சண்டையிட்ட 5 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். 6 ராணுவ வீரர்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 

இந்த தாக்குதல் செய்தியறிந்து அதிர்ச்சி அடைந்ததாக கூறியுள்ள மத்திய ஒபாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், உயிரிழந்த வீரர்கள் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதல் சம்பவம் குறித்து எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி மற்றும் பல அரசியல் தலைவர்கள் இரங்கல், கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Edit by Prasanth.K